×

வீட்டு மனை‌ பட்டா கேட்டு சிபிஐஎம்எல் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு: வீட்டு மனை‌ பட்டா கேட்டு சிபிஐஎம்எல் சார்பில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செங்கல்பட்டு வட்டம் மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட தைலாவரம் புவனேஸ்வரியம்மன் நகர் மக்களுக்கு பட்டா, வீட்டுமனை கேட்டு சிபிஐஎம்.எல் சார்மிளா கட்சியின் ஒன்றிய செயலாளர் பாலாஜி தலைமையில் செங்கற்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சிபிஐஎம்எல் மாவட்ட செயலாளர் ரணியப்பன், கூடுவாஞ்சேரி நகர செயலாளர் தினேஷ்குமார், மாவட்ட தலைவர் ராஜேஸ்குமார் ஆகியோர் கண்டன உறையாற்றினர். வட்டாட்சியரை நேரில் சந்தித்து பட்டா வேண்டி பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் கொடுக்கப்பட்டன. இதில், இறுதியாக செங்கற்பட்டு ஆதிதிராவிட நல வட்டாட்சியரை சந்தித்து வண்டலூர் சர்வே எண் 114 ஆதி திராவிட மக்கள் குடியிருப்பில் நடந்த நில மோசடி குறித்து உடன் விசாரணை நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

The post வீட்டு மனை‌ பட்டா கேட்டு சிபிஐஎம்எல் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : CPIML ,Heedtu Manai Patta ,Chengalpattu ,Manai Patta ,CBIM ,Thailavaram ,Bhubaneswaryamman Nagar ,Chengalpattu Circle ,Union ,El Charmila ,Balaji ,CBIML Kavana Attraction Protest ,Dinakaran ,
× RELATED இலவச வீட்டுமனை பட்டா வழங்காததால் சலவை தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு