×

ஆட்டோ மொபைல் கடைக்காரர் ஆயில் குடித்து தற்கொலை முயற்சி

திருவொற்றியூர்: தண்டையார்பேட்டை இளைய முதலி தெருவில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சங்கர் (65), கொடுங்கையூரில் ஆட்டோ உதிரி பாகம் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் சங்கர் செல் ஆயில் குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதை பார்த்த அவருடைய தம்பி, சங்கரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு, அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், வியாபாரத்திற்காக கடந்த 2019ம் ஆண்டு சம்பத் என்பவர் மூலம் அறிமுகமான குரு ஆனந்த் என்பவரிடம் ₹5 லட்சமும், சிவா என்பவரிடம் ₹13 லட்சமும் சங்கர் வாங்கி உள்ளார். இதற்காக மீட்டர் வட்டி, ஸ்பீடு வட்டி என்று அதிகமாக பணம் கட்டி வந்துள்ளார். ஆனாலும் கூடுதல் வட்டி கேட்டு தொடர்ந்து மிரட்டியுள்ளனர். இதனால் மன வேதனையில் தற்கொலைக்கு முயற்சி செய்தது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்னர். இச்சம்பவம் தண்டையார்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post ஆட்டோ மொபைல் கடைக்காரர் ஆயில் குடித்து தற்கொலை முயற்சி appeared first on Dinakaran.

Tags : Tiruvottiyur ,Shankar ,Ilaya Mudali Street ,Thandaiyarpet ,Kodunkaiyur ,
× RELATED அரசுப்பள்ளி வளாகத்தில் இருந்து...