×

ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான மாநில ஆணைய தலைவராக ஐகோர்ட் முன்னாள் நீதிபதி தமிழ்வாணன் நியமனம்

சென்னை: மாநில அளவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆகியோருடைய சட்டபூர்வமான உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்களுடைய முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், ‘தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மாநில ஆணையம்’ அமைக்கப்பட்டு தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்பட்டு வருகிறது.

இவ்வாணையத்தின் முந்தைய தலைவர் நீதியரசர் சிவகுமார், சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கடந்த மே மாதம் 11ம் தேதி ஒய்வு பெற்ற நிலையில், தற்போது இவ்வாணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி தமிழ்வாணன், தலைவராக நியமனம் செய்து அரசு ஆணையிட்டுள்ளது. புதிதாக நியமனம் செய்யப்பட்ட தலைவரின் பதவிக் காலம் 3 ஆண்டுகள் ஆகும்.

The post ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான மாநில ஆணைய தலைவராக ஐகோர்ட் முன்னாள் நீதிபதி தமிழ்வாணன் நியமனம் appeared first on Dinakaran.

Tags : Adi Dravidar ,ICourt ,Tamilvanan ,State Commission for Tribal Affairs ,CHENNAI ,Adi Dravidians ,Tribals ,Tamil Nadu State Commission for Adi Dravidians and Tribals' ,commission for tribals ,Dinakaran ,
× RELATED அரசு ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்