×

கேரள சட்டசபை கூட்டம் நாளை தொடங்குகிறது

திருவனந்தபுரம்: கேரள சட்டசபை கூட்டத்தொடர் நாளை (4ம் தேதி) தொடங்கி 18ம் தேதி வரை நடைபெறுகிறது. 15வது கேரள சட்டசபையின் 12வது கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. நாளை கூட்டம் தொடங்கிய உடன் வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படும். அதன் பிறகு நாளை வேறு சபை நடவடிக்கைகள் எதுவும் நடைபெறாது. பின்னர் 7ம் தேதி முதல் 18ம் தேதி வரை 8 நாட்கள் சபை கூடும்.

ஆர்எஸ்எஸ் தலைவர்களை கேரள சட்டம், ஒழுங்கு ஏடிஜிபி அஜித்குமார் ரகசியமாக சந்தித்தது. முதல்வர் பினராயி விஜயன், முதல்வரின் அரசியல் செயலாளர் சசி, சட்டம், ஒழுங்கு ஏடிஜிபி அஜித்குமார் ஆகியோருக்கு எதிராக நிலம்பூர் தொகுதி சிபிஎம் ஆதரவு எம்எல்ஏ அன்வர் கூறிய கருத்துக்கள் ஆகியவை இந்த கூட்டத் தொடரில் எதிரொலிக்கும் என்று கருதப்படுகிறது.

 

The post கேரள சட்டசபை கூட்டம் நாளை தொடங்குகிறது appeared first on Dinakaran.

Tags : Kerala ,Thiruvananthapuram ,Kerala Assembly ,15th Kerala Assembly ,Wayanad ,
× RELATED நடிகை பலாத்கார வழக்கில் திலீப்புக்கு...