ராகுல் காந்தி 11,12ந்தேதி நிகழ்ச்சிகளில் பங்கேற்க யுஏஇ வருகை.. வரவேற்பு ஏற்பாடுகள் தீவிரம்

துபாய் . யுஏஇக்கு ராகுல் காந்தி ஜனவரி 11, 12 ஆகிய தேதிகளில் வருகை தருகிறார். ஜனவரி 11 ஆம் தேதி மகாத்மா காந்தியின் 150 வருட சகாப்தத்தை நினைவு கூறும் வகையில் நிகழ்ச்சி துபாய் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில்    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சிறப்புரையாற்றுகிறார்.

அதோடு துபாயில் தொழிலாளர்கள் மற்றும் இந்திய தொழிலதிபர்களையும் சந்திக்கிறார்.
Advertising
Advertising

 

யுஏஇ வருகை தரும் ராகுல் காந்திக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கவும், துபாயில் நடக்கும் விழாவை மிகப் பிரமாண்டமான அளவில் நடத்தவும் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளர்கள் மற்றும் ஓவர்சீஸ் காங்கிரஸ் நிர்வாகிகள் அங்கு முகாமிட்டு அது தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கவனித்து வரும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் ஹிமான்ஸூ வியாஸ் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் இதில் அவர் கூறிதாவது..

ராகுல் காந்தியின் யுஏஇ வருகை வரலாற்று சிறப்புமிக்க பயணமாக அமையும் துபாய் மற்றும் அபுதாபி நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். பல்லாயிரக்கணகான இந்தியர்கள் அவரது நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்கள் என்றார்.

Related Stories: