×

சிறைகளில் ஜாதிய பாகுபாடு இருந்தால் மாநில அரசுகள்தான் பொறுப்பேற்க வேண்டும் : உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

டெல்லி :சிறைகளில் ஜாதியை வைத்து பாகுபாடு காட்டக்கூடாது என்று உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. உத்தர பிரதேசம், தமிழகம் உள்பட 11 மாநிலங்களின் சிறைக் கையேடுகள் சிறையில் கைதிகளுக்கான பணி ஒதுக்கீட்டில் ஜாதி அடிப்படையில் பாகுபாட்டை ஊக்குவிப்பதாக புகாா் தெரிவித்து மகாராஷ்டிர மாநிலம் கல்யாண் பகுதியைச் சோ்ந்த சுகன்யா சாந்தா என்பவா் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘சில மாநிலங்களின் சிறைகளில் குறிப்பிட்ட பழங்குடியின சமூகத்தினருக்கும், தொடா் குற்ற பின்னணி உடைய நபா்களுக்கும் சிறைப் பணி ஒதுக்கீட்டில் ஜாதி அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுகிறது. குறிப்பாக உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், ஆந்திரம், தெலங்கானா, பஞ்சாப், ஒடிஸா, ஜாா்க்கண்ட், கேரளம், தமிழகம், மகாராஷ்டிரம் ஆகிய 11 மாநில சிறைக் கையேடுகள், கைதிகளுக்கான பணி ஒதுக்கீட்டில் ஜாதிய பாகுபாட்டை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளன. எனவே, இந்த கையேடுகளில் இடம்பெற்றுள்ள தவறான விதிகளை ரத்து செய்யவேண்டும்’ என்று கோரியிருந்தாா்.

இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. அதில், “சிறைகளில் ஜாதிய வைத்து பாகுபாடு காட்டக்கூடாது. சிறைகளில் ஜாதியை பாகுபாடு இருந்தால் மாநில அரசுகள்தான் பொறுப்பேற்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. உள்ளிட்ட விளிம்பு நிலை மக்களை சிறைகளில் பாகுபாடுடன் நடத்தக்கூடாது.தண்டனை குறைப்பு, சுத்தம் செய்வது, சமையல் செய்வது போன்ற பணிகளில் ஜாதிய பாகுபாடு காட்டக் கூடாது. சிறை விதிகளை 3 மாதத்தில் மாற்றி அமைக்க ஒன்றிய மற்றும் அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிடுகிறது. ஜாதி அடிப்படையில் கழிவறைகளை, தண்ணீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணிகள் யாருக்கும் வழங்கக் கூடாது.Habitual Criminals என்று குறிப்பிடும் சிறை விதிமுறைகள், அரசியல் சாசனம் 14, 15, 17, 21, 23 க்கு எதிரானது.ஒன்றிய அரசின் 2016, 2023 சிறை விதிமுறைகளை மாற்ற வேண்டும்,”இவ்வாறு தெரிவித்தனர்.

The post சிறைகளில் ஜாதிய பாகுபாடு இருந்தால் மாநில அரசுகள்தான் பொறுப்பேற்க வேண்டும் : உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Delhi ,Maharashtra ,Uttar Pradesh ,Tamil Nadu ,
× RELATED வழிபாட்டுத் தலங்களுக்கு எதிராக...