×

மும்பையை தொடர்ந்து சென்னையிலும் வானிலை ரேடார் நெட்வொர்க்: புவி அறிவியல் அமைச்சகம் அறிவிப்பு

புதுடெல்லி: இந்தியாவில் நிலவும் பருவநிலை தொடர்பான சிக்கலான விஷயங்களை பகுப்பாய்வு செய்ய, கணிக்க முடியாத வானிலை மாற்றங்களை சமாளிக்க, அதிதீவிர வானிலை நிகழ்வுகளை முன்கூட்டியே அறிந்து கொள்ள ஒன்றிய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின்கீழ் மிஷன் மவுசம் என்ற திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மும்பையில் வானிலை முன்னறிவிப்புக்காக நான்கு எக்ஸ் – பேண்ட் வானிலை ரேடார்கள் திறக்கப்பட்டது. இந்நிலையில் அடுத்த ஓராண்டுக்குள் சென்னை, டெல்லி மற்றும் கொல்கத்தா ஆகிய பெருநகரங்களிலும் இந்த திட்டத்தை விரிவுப்படுத்த ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி அந்த நகரங்களிலும் கூடுதல் ரேடார்கள் நிறுவப்படும். மிஷன் மவுசம் திட்டத்தின்கீழ் வானிலை முன்னறிவிப்புகளை வலுப்படுத்த நாடு முழுவதும் 50 வானிலை ரேடார்களை நிறுவ அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் எம்.ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

The post மும்பையை தொடர்ந்து சென்னையிலும் வானிலை ரேடார் நெட்வொர்க்: புவி அறிவியல் அமைச்சகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Weather Radar Network ,Mumbai ,Chennai ,Ministry of Geosciences ,NEW DELHI ,Mission Museum ,Ministry of Geosciences of the Union State ,India ,
× RELATED ஐஎஸ்எல் கால்பந்து சென்னை – மும்பை இன்று மோதல்