×

சுற்றுலா பஸ் செல்ல தடை விதிப்பு பில்லர் ராக்- மோயர் பாயிண்ட் ரவுண்டு அடிக்க ரூ.200 கட்டணம்

Kodaikanal, Pillor Rock, Round Trip*வேன் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

கொடைக்கானல் : கொடைக்கானலில் வனத்துறை சுற்றுலாத் தலங்களுக்கு பஸ் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வேன் உரிமையாளர்கள் சங்கத்தினர் சுற்றுலாப்பயணிகளை நபர் ஒருவரை ரூ.200 கட்டணத்தில் அழைத்து சென்று வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த செப். 28ம் தேதி முதல் மாற்று ஒரு வழிப்பாதை முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. கோக்கர்ஸ் வாக் வழியாக புறப்பட்டு பாம்பார்புரம் சாலை, தூண் பாறை, குணா குகை, பைன் மரக்காடுகள், மோயர் பாய்ண்ட், அப்சர்வேட்டரி சாலை வழியாக ஏரி சாலையை அடையும் வகையில் இந்த ஒரு வழிப்பாதை முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது.

மேலும் அன்றிலிருந்தே இந்த பகுதிகளுக்கு செல்ல பேருந்து உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பஸ்களில் வரும் சுற்றுலாப்பயணிகள் இந்த பகுதிகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து இந்த பகுதிகளை சுற்றி காண்பிக்க கொடைக்கானல் வேன் ஓட்டுநர்கள் உரிமையாளர்கள் சங்கம் நபர் ஒன்றுக்கு ரூ.200 கட்டணம் நிர்ணயித்து உள்ளது.

இதுகுறித்து வேன் ஓட்டுனர்கள் உரிமையாளர்கள் சங்க தலைவர் அந்தோணி கூறுகையில், ‘‘சுற்றுலாப்பயணிகளின் வசதிக்காக குறிப்பாக பஸ்களில் வருபவர்களுக்காக நபர் ஒன்றுக்கு ரூ.200 கட்டணம் நிர்ணயம் செய்து எங்களது வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.கூடுதல் கட்டணம் யாராவது வசூல் செய்தாலோ அல்லது குறிப்பிட்ட சுற்றுலா இடங்களை காண்பிக்க மறுத்தாலோ அவர்கள் மீது சங்கம் நடவடிக்கை எடுக்கும்’’ என்றார்.

The post சுற்றுலா பஸ் செல்ல தடை விதிப்பு பில்லர் ராக்- மோயர் பாயிண்ட் ரவுண்டு அடிக்க ரூ.200 கட்டணம் appeared first on Dinakaran.

Tags : Biller Rock-Moir Point ,VAN OWNERS ASSOCIATION ,KODAIKANAL ,Dindigul District, ,Godaikanal ,Dinakaran ,
× RELATED கொடைக்கானல் கிளாவரையில் ஏற்பட்ட...