யுஏஇ-யில் தடகளத்தில் சாதனை படைக்கும் தமிழக மாணவி

துபாய்: தமிழகத்தை சேர்ந்த மாணவி  நவ்சின் முஹைதீன் இவர் யுஏஇ நகரமான சார்ஜாவில் உள்ள சார்ஜா இந்தியன் பள்ளியில் 12வது படித்து வருகிறார். இவர் உயரம் தாண்டுதலில் யுஏஇ-யில் சிபிஎஸ்சி பள்ளியளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

சமீபத்தில் இந்தியாவில்  நடைபெற்ற சர்வதேச அளவிலான சிபிஎஸ்சி பள்ளி மாணவியர் பங்கேற்ற உயரம் தாண்டுதல் போட்டியில் முதல் பத்து இடங்களில் 6வது இடம் பெற்றார். தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை குவித்து வருகிறார்.

× RELATED ராகுல் காந்தி 11,12ந்தேதி நிகழ்ச்சிகளில்...