×

மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்பு மே.வங்கத்தில் 12 இடங்களில் என்ஐஏ சோதனை

கொல்கத்தா: கொல்கத்தாவில் மாவோயிஸ்ட்டுகளுக்கு சொந்தமான இடம் தொடர்பாக மேற்குவங்கத்தின் 12 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். மாவோயிஸ்ட் இயக்கத்துடன் தொடர்புடைய இரண்டு பெண்கள் கொல்கத்தாவில் பதுங்கியிருப்பதாக புகார் எழுந்தது. மேலும் கிழக்கு இந்தியாவில் மாவோயிஸ்ட் இயக்கத்தை பரப்ப செய்யும் நோக்கத்துடன் அவர்கள் அங்கு தங்கியிருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து மேற்குவங்கத்தின் 12 இடங்களில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். தெற்கு கொல்கத்தாவின் நேதாஜி நகர், வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ள பனிஹட்டி, பாரக்பூர், சோடேபூர், பாஸ்கின் பர்தமான் மாவட்டத்தில் உள்ள அசன்சோல் உள்பட மேற்குவங்கத்தின் 12 இடங்களில் இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டது. 2 பெண்கள் மற்றும் அவர்களது கூட்டாளிகளின் மாவோயிஸ்ட் தொடர்பு குறித்த இந்த சோதனைகளின்போது பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தேசிய புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்பு மே.வங்கத்தில் 12 இடங்களில் என்ஐஏ சோதனை appeared first on Dinakaran.

Tags : NIA ,Bengal ,Maoists ,Kolkata ,National Intelligence Agency ,West Bengal ,Maoist ,East India ,
× RELATED வங்கக்கடலில் காற்று சுழற்சி தமிழகத்தில் 11ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு