×

மனதின் குரல் போன்ற நம்பிக்கை ஊட்டும் நிகழ்ச்சிகளை மக்கள் விரும்புகிறார்கள்: பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: நம்பிக்கை ஊட்டும் நிகழ்ச்சிகளை கேட்பதில் மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள் என்பது மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் தெரியவருகிறது என்று பிரதமர் மோடி கூறினார். பிரதமர் மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையும் மனதின் குரல்(மன் கி பாத்) பெயரில் வானொலி மூலம் நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார். இந்த நிலையில், 114-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் மோடி நேற்று உரையாற்றுகையில்,‘‘ மனதின் குரல் நிகழ்ச்சி 10 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.

இந்த நிகழ்ச்சி மக்களின் உணர்வுகளையும் தேசத்தின் கூட்டு வலிமையையும் வெளிப்படுத்தும் ஒரு தனித்துவதளமாக மாறியுள்ளது. என்னுடைய செய்தியை மக்களிடம் கொண்டு சென்றதற்கு ஊடகங்களுக்கு நன்றி. உள்ளடக்கம் காரமானதாகவோ அல்லது எதிர்மறையாகவோ இல்லை என்றால் மக்கள் கவனத்தை திருப்ப முடியாது என்ற கருத்து உள்ளது. இருப்பினும் மன் கிபாத் நிகழ்ச்சியில் நம்பிக்கை ஊட்டும் தகவல்களுக்காக மக்கள் ஆர்வமாக இருப்பதை காட்டுகிறது.

மேக் இன் இந்தியா திட்டமும் 10 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. ஒவ்வொரு துறையிலும் அன்னிய நேரடி முதலீடுகள் அதிகரிப்பே அதன் வெற்றிக்கு சாட்சியாகும். உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம். இத்திட்டத்தின் மூலம் இந்தியாவை தன்னிறைவு பெற்ற நாடாக மாற்றி, பொருளாதாரத்தில் வலுவடைந்த நாடாக மாற்ற வேண்டும் என்பதே இதன் இலக்கு.இத்திட்டம் துவங்கியதற்கு முன்பாகவும், துவங்கிய பிறகு பொருளாதாரத்தில் எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது பற்றிய ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.

எனது அமெரிக்கப் பயணத்தின் போது அமெரிக்க அரசு இந்தியாவிடம் 300 தொன்மையான கலைப்படைப்புகளை திருப்பிக் கொடுத்தது. அமெரிக்க அதிபர் பைடன் டெலாவேரில் உள்ள தன்னுடைய இல்லத்தில் சில கலைப்படைப்புகளை என்னிடம் காட்டினார். திருப்பிக் கொடுக்கப்பட்ட கலைப்படைப்புகள், சுடுமண்பாண்டம், கல், யானையின் தந்தம், மரம், வெண்கலம், செம்பு போன்றவை இருந்தன. இவற்றில் பல 4000 ஆண்டுகள் பழைமையானவை. அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. தன் வாழ்வில் தூய்மையை கடைப்பிடித்த அவருடைய பிறந்தநாளில் தூய்மை இந்தியா திட்டம் தொடங்கப்பட்டு 10 வது ஆண்டு முடிவடைகிறது’’ என்றார்.

The post மனதின் குரல் போன்ற நம்பிக்கை ஊட்டும் நிகழ்ச்சிகளை மக்கள் விரும்புகிறார்கள்: பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.

Tags : PM Modi ,New Delhi ,Modi ,Manatin ,Mann Ki Baat ,Manatin Voor ,
× RELATED சிறுகுறு தொழில்கள் அழிந்துவிட்டன;...