×

ஜார்க்கண்ட் பேரவை தேர்தலில் பஸ்வான் கட்சி தனித்து போட்டி

ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளதாக பாஜ கூட்டணியில் உள்ள லோக்ஜன சக்தி(ராம்விலாஸ் பஸ்வான்) அறிவித்துள்ளது. ஜார்க்கண்டில் 81 உறுப்பினர்களை கொண்ட சட்டப்பேரவைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஜார்க்கண்ட் பேரவை தேர்தலில் பாஜ கூட்டணியில் அங்கம் வகிக்கும் லோக்ஜன சக்தி(ராம்விலாஸ் பஸ்வான்) கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து லோக்ஜன சக்தி(ராம்விலாஸ் பஸ்வான்) கட்சி தலைவரும், ஒன்றிய உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சருமான சிராக் பஸ்வான் ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “ ஜார்க்கண்டில் லோக்ஜன சக்தி(ராம்விலாஸ் பஸ்வான்) கட்சிக்கு வலுவான மக்கள் தளம் அமைந்துள்ளது. இதனால் ஜார்க்கண்ட் பேரவை தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளோம். இதுகுறித்து கட்சியினருடன் ஆலோசித்து வருகிறோம்” என்று கூறினார்.

The post ஜார்க்கண்ட் பேரவை தேர்தலில் பஸ்வான் கட்சி தனித்து போட்டி appeared first on Dinakaran.

Tags : Baswan party ,Jharkhand assembly ,Ranchi ,Lokjana Sakthi ,Ram Vilas Paswan ,BJP ,Jharkhand Assembly elections ,Jharkhand ,Dinakaran ,
× RELATED மார்க்சிஸ்ட் ஒருங்கிணைப்பாளராக பிரகாஷ் கரத் நியமனம்