×

ஏடிஎம் கொள்ளையனிடம் நீதிபதி நேரில் விசாரணை

பள்ளிபாளையம்: கேரள மாநிலம் திருச்சூரில் 3 ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து ரூ.67 லட்சத்துடன் கன்டெய்னர் லாரியில் தப்பிய அரியானா கொள்ளையர்களை நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள வெப்படை சன்னியாசிபட்டியில் மடக்கி போலீசார் பிடித்தனர். அப்போது போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற அரியானா மாவட்டம் பல்வாலை சேர்ந்த கொள்ளையர்கள் அஜர்அலி(30), ஜுமாந்தின் ஆகியோரை போலீசார் பாதுகாப்புக்காக துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் ஜூமாந்தின் இறந்தான். அஜர் அலிக்கு இரண்டு கால்களிலும் குண்டு பாய்ந்தது. இதையடுத்து கோவை அரசு மருத்துவமனையில் அஜார் அலிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவனிடம் குமாரபாளையம் குற்றவியல் நீதித்துறை நடுவர் மாலதி நேற்று நேரில் விசாரணை மேற்கொண்டார். அஜர்அலி தெரிவித்த விவரங்களை நீதிபதி வீடியோ பதிவு செய்தார். இதனிடையே கொள்ளையர் கைது, என்கவுன்டர் குறித்து நேரில் விசாரிக்க தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் நாளை நாமக்கல் வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post ஏடிஎம் கொள்ளையனிடம் நீதிபதி நேரில் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Pallipalayam ,Ariana ,Thrissur ,Vepadai Sannyasipatti ,Namakkal district ,
× RELATED தமிழக – கேரள எல்லையில் நிபா வைரஸ் கண்காணிப்பு முகாம் அக்.15 வரை நீட்டிப்பு