தமிழ்நாட்டில் நம்பிக்கையோடு முதலீடு செய்யுங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் நம்பிக்கையோடு முதலீடு செய்யுங்கள். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, புதுமை, உலகளாவிய கூட்டாண்மைகள் ஆகியவற்றை நமது திராவிட மாடல் அரசு முன்னெடுத்து வரும் நிலையில், இந்தியாவின் தொழிற்புரட்சிக்கும் பொருளாதார எதிர்காலத்துக்கும் தலைமை தாங்கிட நமது மாநிலம் தயாராக உள்ளது. எல்லாருக்கும் எல்லாம் என்ற வழியில் நடைபோடும் தமிழ்நாட்டில் முதலீடு செய்வீர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post தமிழ்நாட்டில் நம்பிக்கையோடு முதலீடு செய்யுங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட் appeared first on Dinakaran.

Related Stories: