வளி மண்டல சுழற்சி தமிழகத்தில் அக்.1ம் தேதி வரை கன மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழக உள் மாவட்டங்களின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளதா்ல் தமிழகத்தில் அக்டோபர் 1ம் தேதி வரை ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை மாவட்ட மலைப் பகுதிகள், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. 30ம் தேதி மற்றும் அக்டோபர் 1ம் தேதி, முதல் 3ம் தேதி வரையில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 98 டிகிரி முதல் 100 டிகிரி வரை இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

The post வளி மண்டல சுழற்சி தமிழகத்தில் அக்.1ம் தேதி வரை கன மழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: