×

மும்பை போலீஸ் எனக்கூறி பெண்ணிடம் ரூ.2 லட்சம் மோசடி

அம்பத்தூர்: வில்லிவாக்கம் ஜெகநாதன் நகரை சேர்ந்தவர் மீனாட்சி தேவி (38). கடந்த 23ம் தேதி செல்போனில் இருந்து மீனாட்சி தேவியை தொடர்பு கொண்ட நபர் ஒருவர், மும்பையில் இருந்து பேசுவதாகவும் சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் எனக் கூறி அறிமுகப்படுத்திக் கொண்டு, உங்களது பெயரில் பெடாக்ஸ் என்ற கூரியரில் மும்பையில் இருந்து ஈரானுக்கு ஒரு கூரியர் சென்றுள்ளது. அதில் 4 காலாவதியான பாஸ்போர்ட் மற்றும் மடிக்கணினி, 3 கிலோ துணிமணிகள் மற்றும் 450 கிராம் போதைப்பொருள் உள்ளது.

உங்களது டெபிட் கார்டில் இருந்து ரூ.93 ஆயிரம் கட்டப்பட்டுள்ளது எனக்கூறி மிரட்டியுள்ளார். பிறகு அந்த பணம் கட்டப்பட்டது. உங்களது அக்கவுன்ட்தானா என்பதை பரிசோதனை செய்ய நாங்கள் தரும் அக்கவுன்ட்டுக்கு ரூ.1 லட்சம் என இரு முறை அனுப்புங்கள் என கூறியுள்ளனர். ரேணுகா தேவியும் இருமுறை பணத்தை அனுப்பி உள்ளார். 2 லட்சம் அனுப்பிய பிறகு மீண்டும் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மும்பை போலீஸ் எனக்கூறி பெண்ணிடம் ரூ.2 லட்சம் மோசடி appeared first on Dinakaran.

Tags : Mumbai police ,Ampathur ,Meenakshi Devi ,Villivakkam ,Jaganathan ,Mumbai ,
× RELATED லஞ்சம் வாங்கிய விஏஓ நண்பருடன் கைது