கொள்ளிடத்தில் பயனற்று கிடக்கும் பழமையான வேளாண் கிடங்கு கட்டிடத்தை அகற்ற வேண்டும்

*பொதுமக்கள் கோரிக்கை

கொள்ளிடம் : கொள்ளிடத்தில் பயனற்று இருந்து வரும் பழமையான வேளாண் கிடங்கு கட்டிடத்தை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் வேளாண் உதவி இயக்குனர் அலுவலகமும், அதனருகில் வேளாண் கிடங்கு கட்டிடமும் அமைந்துள்ளது. இந்த கட்டிடங்கள் கட்டப்பட்டு 40 வருடங்களுக்கும்மேல் ஆகிறது.

இந் நிலையில் வேளாண் அலுவலகம் மிகவும் பழமையான நிலையில் மேற்கூரையின் உள்பகுதியில் உள்ள சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்து மழைக்காலத்தில் தண்ணீர் கட்டிடத்துக்குள்ளே கசிந்து வந்து கொண்டிருந்ததால் அலுவலகம் நடத்துவதற்கு உரிய இடமாக இல்லை என்பதை கருத்தில் கொண்டு கடந்த இரண்டு வருட காலமாக கொள்ளிடம் அருகே சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள புத்தூர் என்ற இடத்தில் வேளாண் உதவியியக்குனர் அலுவலகம் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. ஆனால் வேளாண் கிடங்கு கட்டிடம் மிகவும் பழமையான நிலையில் எந்த பயனும் இன்றி இடத்தை அடைத்துக் கொண்டு இருந்து வருகிறது.

இந்த இரு கட்டிடங்களையும் இடித்து அகற்றி விட்டு புதுமையான கட்டிடம் கட்டினால் வேளாண் அலுவலகம் வழக்கம்போல் இயங்கும்.புதிய கிடங்கு கட்டிடத்திலும் விவசாய இடுபொருட்கள் மற்றும் உரம் விதைகள் மற்றும் வேளாண் கருவிகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களை வைத்து பாதுகாக்க முடியும். உரிய வேளாண் கட்டிடம் இல்லாமல் இருந்து வருவதால் விவசாயிகள் உரிய பொருட்களை சென்று விரைந்து எடுத்து முடியாத நிலையில் இருந்து வருகின்றனர். எனவே மிகப் பழமையான வேளாண் உதவி இயக்குனர் அலுவலக கட்டிடம் மற்றும் வேளாண் கிடங்கு கட்டிடம் ஆகிய இரு கட்டிடங்களையும் இடித்த அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post கொள்ளிடத்தில் பயனற்று கிடக்கும் பழமையான வேளாண் கிடங்கு கட்டிடத்தை அகற்ற வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: