7வது நாளாக சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் நேற்று 7வது நாளாக பலத்த போலீஸ் பாதுகாப்போடு முக்கிய தெருவான ஒத்த வாடை தெரு, திருக்கழுக்குன்றம் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது. இதில், பேரூராட்சி ஊழியர்கள் வருவாய்த்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் 30க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து, திருக்கழுக்குன்றம் தாசில்தார் ராதா, மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் சந்திரகுமார், மாமல்லபுரம் வருவாய் ஆய்வாளர் புஷ்பராஜ், டிராபிக் இன்ஸ்பெக்டர் செல்வம், சாலை ஆய்வாளர் சங்கர், துப்புரவு ஆய்வாளர் ரகுபதி, விஏஓ தினேஷ் ஆகியோர் முன்னிலையில், சாலையை அளவீடு செய்து, சாலையை ஆக்கிரமித்து கடைகளுக்கு முன்பு நீண்டு இருந்த சிமென்ட் சீட்டுகள், விளம்பர போர்டுகள், கருங்கல் சிலைகள், சிமென்ட் நடைபாதைகள் ஆகியவற்றை அதிரடியாக அப்புறப்படுத்தினர். அப்போது, ஆக்கிரமிப்பாளர்கள் அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கடும், எதிர்ப்பையும் மீறி ஆக்கிரமிப்புகளை அகற்றி மீண்டும் ஆக்கிரமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கடுமையாக எச்சரித்தனர்.

The post 7வது நாளாக சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம் appeared first on Dinakaran.

Related Stories: