வரத்து குறைவு, தேவை அதிகரிப்பால் மதுரை மாட்டுத்தாவணி சந்தையில் காய்கறிகள் விலை உயர்வு..!!

மதுரை: வரத்து குறைவு மற்றும் தேவை அதிகரிப்பால் மதுரை மாட்டுத்தாவணி சந்தையில் காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது. தக்காளி, தேங்காய், முருங்கைக்காய் உள்ளிட்டவற்றின் விலை கடந்த வாரத்தை காட்டிலும் இவ்வாரம் அதிகரித்துள்ளது. 15 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி விலை ரூ.350-ல் இருந்து ரூ.600 ஆக அதிகரித்தது. கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.60-க்கு விற்கப்பட்ட முருங்கைக்காய் தற்போது ரூ.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த வாரம் ஒரு கிலோ தேங்காய் விலை ரூ.55-ஆக உயர்ந்த நிலையில் நேற்று வாடிப்பட்டி சந்தையில் ஒரு தேங்காய் ரூ.28-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ கேரட் விலை ரூ.50ல் இருந்து ரூ.70ஆகவும் வெங்காயம் விலை ரூ.40-ல் இருந்து ரூ.60 ஆகவும் உயர்ந்தது. மதுரை மட்டுமின்றி தமிழ்நாட்டில் பல இடங்களில் காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது. ஒட்டன்சத்திரத்தில் தினமும் 20,000 பெட்டிகள் தக்காளி வந்த நிலையில் 2 நாளாக 7,000 பெட்டிகளே வருகின்றன. வானிலை காரணமாக காய்கறிகள் விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தகவல் தெரிவித்தனர்.

The post வரத்து குறைவு, தேவை அதிகரிப்பால் மதுரை மாட்டுத்தாவணி சந்தையில் காய்கறிகள் விலை உயர்வு..!! appeared first on Dinakaran.

Related Stories: