துபாயில் உலகின் உயரமான கட்டிட‌த்திலிருந்து தமிழில் நிகழ்ச்சி ஒலிபரப்பி சாதனை படைத்த கில்லி எப்.எம்

துபாய்: அமீரகத்தில் தமிழில் ஒலிபரப்பு செய்து வரும் 106.5 கில்லி பன்பலை, நிலையம் தொடங்கி 500 நாள் கடந்ததை கொண்டாடும் வகையில் உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் கலீபா கட்டிடத்தின் 148வது மாடியிலிருந்து ஒருநாள் நிகழ்ச்சியை ஒலிபரப்பு செய்து சாதனை படைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் கில்லியின் நேயர்களும் கட்டணமின்றி அழைத்து செல்லப்பட்டனர். நிகழ்ச்சியில் கில்லி எப்.எம் குழுவினர், நிகழ்ச்சி தயாரிப்பின் தலைமை நிர்வாகி ஆர்.ஜே நிவி, ஆர்.ஜே அருண், ஆர்.ஜே அஞ்சனா, ஆர்.ஜே பிரதீப், ஆர்.ஜே கிரிஷ் மற்றும் சி.இ.ஒ அசோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

× RELATED துபாயில் தமிழக எப்.எம்...