×

தமிழகத்தில் எந்த மர்மக் காய்ச்சலும் தற்போது இல்லை; டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர்.! அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்

சென்னை: தமிழகத்தில் எந்த மர்மக் காய்ச்சலும் தற்போது இல்லை என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை சின்ன போரூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மதுரவாயல் தொகுதிக்குட்பட்ட 9 அரசு பள்ளிகளில் பயிலும் 1480 மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அத்துடன் கடந்த ஆண்டு மதுரவாயல் தொகுதிக்குட்பட்ட அரசுப் பள்ளிகளில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ மாணவியருக்கு ரூ.10 ஆயிரம், ரூ.5 ஆயிரம் மற்றும் ரூ.2 ஆயிரம் என்ற வரிசைஇயில் நிதி மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

மதுரவாயல் எம்.எல்.ஏ க.கணபதி தலைமையில் இந்நிகழ்ச்சியில் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று திட்டத்தை தொடங்கி வைத்தார். அத்துடன் திமுக கவுன்சிலர்கள் மற்றும் நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், “டெங்குக் காய்ச்சலின் பரவல் குறையத் தொடங்கி தமிழகத்தில் கட்டுக்குள் இருக்கிறது. டெங்கு உயிரிழப்புகளை பொறுத்தவரையில் 2016, 2017ஆம் ஆண்டுகளில் டெங்கு பாதிப்பால் உயிரிழப்புகள் அதிகம் ஏற்பட்டிருந்தன.

அந்த நிலை தற்போது இல்லை. கேரள – தமிழக எல்லைகளான 17 பகுதிகளில் சுகாதாரத்துறையின் நிபா வைரஸ் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எல்லை கடந்து வருபவர்களிடம் வெப்பநிலைமாணி கொண்டு பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இதுதவிர குரங்கம்மை நோய்க்கென தமிழகத்தில் சிறப்பு வார்டுகள் தயார் நிலையில் உள்ளன. தற்போது தமிழகத்தில் எந்த மர்மக் காய்ச்சலும் இல்லை. மழைக்காலம் வருவதால் எங்கும் தண்ணீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன” என்று தெரிவித்தார்.

The post தமிழகத்தில் எந்த மர்மக் காய்ச்சலும் தற்போது இல்லை; டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர்.! அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister ,M. Subramanian ,Chennai ,Medical Minister ,Maduravayal ,Chinna ,Porur ,Government ,Girls Higher ,Secondary School ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலினின் 3 ஆண்டுகால...