×

முதலமைச்சர் கோப்பை 2024க்கான கல்லூரி மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்

*750 பேர் பங்கேற்பு

வேலூர் : வேலூர் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் நேற்று நடைபெற்ற போட்டிகளில் அனைத்து கல்லூரிகளை சேர்ந்த 750 மாணவிகள் பங்கேற்று விளையாடினர்.2024ம் ஆண்டு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் கடந்த 10ம் தேதி தொடங்கி வரும் 26ம் தேதி வரை நடக்கிறது.

தடகளம், நீச்சல், மேசைப்பந்து, சிலம்பம், வளைகோல் பந்து, கேரம், சதுரங்கம், கால்பந்து, கைப்பந்து, கபாடி, கையுந்து பந்து, கிரிக்கெட், இறகு பந்து, கோ-கோ, கேரம், சதுரங்கம், வீல்சேர், எறிபந்து என பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் பள்ளி, கல்லூரி மணவ, மாணவிகள், பொதுப்பிரிவினர், மாற்றுத்திறனாளிகள், தமிழக அரசு ஊழியர்களும் பங்கேற்கின்றனர்.

தமிழ்நாடு விளையாட்டு ேமம்பாட்டு ஆணையம் நடத்தும் இப்போட்டிகள் காட்பாடி அரசு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வேலூர் பிரிவு பல்நோக்கு விளையாட்டு அரங்கத்திலும், விஐடி பல்கலைக்கழக விளையாட்டு அரங்கத்திலும் நடத்தப்படுகின்றன. நேற்று கல்லூரி மாணவிகளுக்கான போட்டிகள் காலை 8 மணியளவில் தொடங்கியது. போட்டிகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் பாலமுருகன் தொடங்கி வைத்தார்.

இதில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த அரசு, அரசு நிதியுதவி, சுயநிதி கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளை சேர்ந்த மாணவிகள் 750 பேர் பங்கேற்றனர். இதில் கையுந்து பந்து போட்டிகள் மட்டும் வேலூர் விஐடி பல்கலைக்கழக விளையாட்டு அரங்கில் நடந்தது. இப்போட்டிகளில் 300 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

அதேபோல் நேற்று முன்தினம் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடந்த போட்டிகளில் விளையாட முடியாத கிரிக்கெட், கபாடி போட்டிகள் நேற்று நடைபெற்றது. இதில் 100 கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டுள்்ளனர் என்று மாவட்ட விளையாட்டு அலுவலர் பாலமுருகன் தெரிவித்தார்.

The post முதலமைச்சர் கோப்பை 2024க்கான கல்லூரி மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் appeared first on Dinakaran.

Tags : College Girls ,Chief Minister Cup 2024 ,Vellore ,Chief Minister's Cup ,Chief Minister's Cup 2024 ,
× RELATED கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி