துபாயில் இலவச பல் மருத்துவ முகாம்

துபாய்: துபாய் கோடு சூக் மற்றும் அல் ராஸ் மெட்ரோ நிலையம் அருகில் அல் அப்ரா மருத்துவ நிலையம் உள்ளது. இந்த மருத்துவ நிலையத்தில் பல் மருத்துவராக தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் நஜ்மா நசீர் பணிபுரிந்து வருகிறார். இவர் நாகர்கோவிலைச் சேர்ந்தவர். தற்போது சென்னையில் வசித்து வருகிறார். இவர் சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் படித்தவர். அமீரகத்தில் வசித்து வரும் தமிழக மக்களுக்கு பல்லை பரிசோதித்து அதனை முறையாக பராமரிக்க வேண்டிய ஆலோசனைகள் குறித்து விளக்கி வருகிறார்.

Advertising
Advertising

எனவே பல்லை இலவசமாக பரிசோதனை செய்து தேவையான ஆலோசனைகள் பெற விரும்புபவர்கள் 055 123 1952 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன் பதிவு பெற்று வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பல்லை முறையாக பராமரிப்பதன் மூலம் உடலுக்கு ஏற்படும் பிற தீங்குகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும். எனவே பல் சுகாதாரம் குறித்த விபரங்களை டாக்டரிம் நேரடியாக ஆலோசனை பெற்று தெரிந்து கொள்ளலாம். இந்த அரிய வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளவும். ஆலோசனை பெற வருபவர்கள் தொலைபேசியில் அழைத்து முன்பதிவு செய்து வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Related Stories: