×

திருப்பதியில் ஊழல் செய்யவே லட்டில் மாட்டு கொழுப்பு கலப்பு: தமிழிசை பேட்டி

கோத்தகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் பாஜ சார்பில் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பாஜவை சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: திருப்பதியில் ஊழல் செய்வதற்குதான் லட்டில் மாட்டு கொழுப்பு கலந்துள்ளனர். இந்த சம்பவம் மக்களின் உணர்வுகளோடு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது‌. தவறு செய்தது யாராக இருந்தாலும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். கோயில்களில் அரசாங்கம் பிரச்னை ஏற்படுத்தக்கூடாது. சிறுபான்மையினர் வழிபாட்டு தலங்களில் வரும் வருமானம் அவர்களுக்காகவே செலவு செய்யப்படுகிறது. ஆனால் இந்து கோயில் வருமானம் இந்து கோயிலுக்குகூட செலவு செய்வதில்லை. எனவே இந்து கோயில் நம்பிக்கையானவர்கள் கையில் வர வேண்டும்.

திருப்பதியில்கூட நம்பிக்கை இல்லாதவர்கள்தான் அதை பற்றி கவலையின்றி இருந்துள்ளனர். அதில் முழுமையாக நம்பிக்கை வைத்தவர்கள்தான் அதை கண்டுபிடித்துள்ளார்கள். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மாநாடு நடத்துவதற்கு ஒரு வழியாக அக்டோபர் 27ம் தேதி என‌ அறிவித்துள்ளார். அதில் எந்த கொள்கையை முன்னெடுத்துச் செல்கிறார் என்று சொல்லட்டும். தற்போது வரை ஒரு சாயத்தை பூசிக் கொண்டுள்ளார். விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்துள்ளார். நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றார். இரு மொழி கொள்கைக்கு ஆதரவு தெரிவிக்கிறார். தன்னுடைய படம் எல்லா மொழியிலும் வெளி வர வேண்டும். ஆனால் குழந்தைகள் மற்ற மொழிகளை கற்றுக் கொள்ளக்கூடாது என்பது எவ்விதமான நியாயம்‌. இவ்வாறு அவர் கூறினார்.

The post திருப்பதியில் ஊழல் செய்யவே லட்டில் மாட்டு கொழுப்பு கலப்பு: தமிழிசை பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tirupati ,Kotagiri ,BJP ,Nilgiri district ,Tamilisai Soundararajan ,
× RELATED விலங்கு கொழுப்பு கலந்த நெய் சப்ளை...