×

ஹேக் செய்யப்பட்ட உச்சநீதிமன்றத்தின் அதிகாரபூர்வ யூடியூப் சேனல்.. சரிசெய்யும் பணியில் தொழில்நுட்ப வல்லுநர்கள்!!

டெல்லி: உச்சநீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தை மர்ம நபர்கள் ஹேக் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசியலமைப்பு அமர்வு முன் பட்டியலிடப்பட்டுள்ள வழக்குகள் மற்றும் பொது நலன் வழக்கு விசாரணைகளை நேரலை செய்ய உச்சநீதிமன்றம் யூடியூப் பயன்படுத்துகிறது. அண்மையில் நடைபெற்ற கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக் கொலை வழக்கை தானாக முன்வந்து விசாரணக்கு எடுத்த உச்ச நீதிமன்றம் அதனை யூடியூப்பில் நேரடியாக ஒளிபரப்பியது.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் யூடியூப் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அடையாளம் தெரியாத நபர்கள் ஹேக் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ரிப்பிள் என்ற பெயரில் உச்சநீதிமன்றத்தின் யூடியூப் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இதனால் வழக்கு விசாரணை நேரலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்யும் பணியில் தொழில்நுட்ப வல்லுனர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

The post ஹேக் செய்யப்பட்ட உச்சநீதிமன்றத்தின் அதிகாரபூர்வ யூடியூப் சேனல்.. சரிசெய்யும் பணியில் தொழில்நுட்ப வல்லுநர்கள்!! appeared first on Dinakaran.

Tags : YouTube ,Supreme Court ,Delhi ,Kolkata ,Dinakaran ,
× RELATED உச்சநீதிமன்றத்தின் யூடியூப் பக்கத்தை...