×

தமிழ்நாட்டில் பொன்னை அணையில் 10 செ.மீ மழை பதிவு: திடீரென்று மாறியது பருவநிலை

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக வேலூர் மாவட்டம் பொன்னை அணையில் 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சென்னை மாதவரத்தில் 7 செ.மீ., திருவள்ளூர் ஆர்.கே.பேட்டை, கொளத்தூரில் தலா 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களில் திடீரென்று பருவநிலை மாறியது. பல இடங்களில் நேற்று வரை 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்த நிலையில் இரவில் மழையால் அனல் தணிந்தது.

 

The post தமிழ்நாட்டில் பொன்னை அணையில் 10 செ.மீ மழை பதிவு: திடீரென்று மாறியது பருவநிலை appeared first on Dinakaran.

Tags : Ponnai dam ,Tamilnadu ,CHENNAI ,Tamil Nadu ,Vellore district ,Chennai Madhavaram ,Tiruvallur RKpet ,Kolathur ,Chengalpattu ,Dinakaran ,
× RELATED கூவம், அடையாறு ஆறுகளில் சிறுபுனல் மின் நிலையங்கள் அமைக்க திட்டம்