×

ரூ.60 லட்சம் வரி நிலுவை: 2 தியேட்டர்களுக்கு சீல் வைத்த சென்னை மாநகராட்சி

சென்னை: 6 ஆண்டாக வரி கட்டாமல் நிலுவையில் வைத்துள்ள நங்கநல்லூர் வெற்றிவேல், வேலன் ஆகிய 2 திரையரங்குகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 2 திரையரங்குகளுக்கு சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டல அதிகாரிகள் சீல் வைத்தனர். 2018-ல் இருந்து திரையரங்குகளின் உரிமையாளர்கள் மாநகராட்சி நிர்வாகத்துக்கு ரூ.60 லட்சம் வரி தொகையை பாக்கி வைத்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியும் பலமுறை நேரில் சென்று கூறியும் வரி செலுத்தாததால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

The post ரூ.60 லட்சம் வரி நிலுவை: 2 தியேட்டர்களுக்கு சீல் வைத்த சென்னை மாநகராட்சி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Municipality ,Nanganallur Vestivel ,Waylon ,Chennai Municipal Alandur Zone Authorities ,Chennai Municipality ,
× RELATED கட்டடக் கழிவுகளைக் கொட்ட மண்டல...