×

பழம்பெரும் நடிகை ‘சி.ஐ.டி சகுந்தலா’ காலமானார்: திரையுலகினர் இரங்கல்!!

சென்னை: 600-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை ‘சி.ஐ.டி சகுந்தலா காலமானார். சேலம் மாவட்டத்தின் அரிசிபாளையத்தைச் சேர்ந்த சகுந்தலா சென்னையில் லலிதா, பத்மினி, ராகினி நடத்தி வந்த நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று நடனமாடி வந்தார். அப்போது கிடைத்த அறிமுகங்களின் மூலம் திரையுலகில் நுழைந்து சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தார். பின்னணி நடனக் கலைஞராக சினிமாவில் கால் பதித்த நடிகை சகுந்தலா, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத் திரையுலகில் 600க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். நேதாஜி (1996), நான் வணங்கும் தெய்வம் (1963), கை கொடுத்த தெய்வம் (1964) உள்ளிட்ட படங்களுக்காக சகுந்தலா அறியப்பட்டார்.

சி.ஐ.டி சங்கர் (1970) படத்தில் ஜெய்சங்கருக்கு ஜோடியாக இவர் நடித்தார். அதன் பிறகு இவரை ‘சி.ஐ.டி சகுந்தலா’ என்று அன்புடன் அழைக்கப்பட்டார். இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ‘பொன்மானை தேடி’. அதன்பின்னர், பல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்தார். அதன்பிறகு வயது மூப்பு காரணமாக பெங்களூருவில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கியிருந்த அவருக்கு, இன்று (செப்.17) நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சகுந்தலாவின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

The post பழம்பெரும் நடிகை ‘சி.ஐ.டி சகுந்தலா’ காலமானார்: திரையுலகினர் இரங்கல்!! appeared first on Dinakaran.

Tags : C. I. D'SAKUNTALA ,Chennai ,I. De Saguntala ,SAKUNTALA ,ARICIPALAYA ,SALEM ,LALITA ,PADMINI ,RAGINI ,. I. D'SAKUNTALA ,
× RELATED சென்னை மெரினாவில் உள்ள நீச்சல்...