×

எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் அதிமுக விரைவில் இணையும்: அடித்து சொல்கிறார் ஓபிஎஸ்

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நேற்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:  அதிமுகவை எம்ஜிஆர் எந்த நோக்கத்திற்காக துவங்கினாரோ, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா யாராலும் வெல்ல முடியாத இயக்கமாக உருவாக்கினாரோ அதனை நிறைவேற்றும் வகையில், தொண்டர்கள் அனைவரும் இணைந்து அதிமுகவிற்கு புதிய சகாப்தத்தை எழுதுவார்கள்.

தொண்டர்கள், பொதுமக்கள் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என விரும்புகின்றனர். ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட்ய் 33 சதவீததுக்கு மேல் வாக்குகள் அளித்தனர். 33 சதவீதம் வாக்குகள் பெற்ற ஒரே சுயேட்சை வேட்பாளர் இந்தியாவிலேயே நான் மட்டும்தான். இதிலிருந்து அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள் எங்களுக்குதான் ஆதரவாக உள்ளனர் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.

The post எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் அதிமுக விரைவில் இணையும்: அடித்து சொல்கிறார் ஓபிஎஸ் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,MGR ,Jayalalithaa ,Atitu ,OPS ,Karaikudi ,Former ,Chief Minister ,O. Panneerselvam ,Sivagangai District ,ADMK ,
× RELATED அதிமுக நிர்வாகி மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு