வாஷிங்டனில் வட்டார தமிழ்ச்சங்கத்தின் முத்தமிழ் விழா

வாஷிங்டன்: வாஷிங்டனில் வட்டார தமிழ்ச்சங்கத்தின் முத்தமிழ் விழா, அமெரிக்காவின் ராக்வில் பகுதியில் உள்ள ரிச்சர்டு மோன்ட்கோமெரி உயர்நிலைப் பள்ளியில் கடந்த 7ம் தேதி நடைபெற்றது. விழாவின் முக்கிய அங்கமாக, மகேந்திரன் பெரியசாமி எழுதிய, விரல்கள் தூவும் விதைகள் என்ற கவிதை தொகுப்பு நூலை திரைப்பட பாடல் ஆசிரியர் கவிஞர் அறிவுமதி வெளியிட்டார். மேலும் விழாவில் குழந்தைகளின் வில்லுப்பாட்டு, பரதநாட்டியம், வாய்ப்பாட்டு, நாடகம் உள்ளிட்ட இன்னிசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. சின்னத்திரை நடிகை ஐஸ்வர்யா பிரபாகர் கரகாட்டம் ஆடி அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றார். விழாவில் தாரை, தப்பட்டை, பறை உள்ளிட்ட நாட்டுப்புற இசை கருவிகளை கொண்ட இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

Advertising
Advertising

Related Stories: