×

பலத்த போலீஸ் பாதுகாப்பு: ஜம்மு – காஷ்மீரில் நாளை 24 தொகுதிகளில் வாக்குப்பதிவு

ஸ்ரீநகர்: ஜம்மு – காஷ்மீரில் மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. அங்கு சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் முதலாவது சட்டசபை தேர்தல் இதுவாகும். யூனியன் பிரதேசமாக மாறியிருக்கும் காஷ்மீரில் முதலாவது அரசை அமைப்பதற்கு பாஜக, காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகளும், தேசிய மாநாடு, மக்கள் ஜனநாயக கட்சி போன்ற மாநில கட்சிகளும் களத்தில் உள்ளன. மாநில முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா மற்றும் அவரது மகன் உமர் அப்துல்லா (தேசிய மாநாடு), மெகபூபா முப்தி (மக்கள் ஜனநாயக கட்சி), எம்பி இன்ஜினீயர் ரஷித் (அவாமி இத்திகாட் கட்சி) உள்ளிட்ட தலைவர்களும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் 24 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதால், நேற்றுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. இதில் 16 தொகுதிகள் காஷ்மீர் பிராந்தியத்திலும், 8 தொகுதிகள் ஜம்முவிலும் உள்ளன. இந்த தொகுதிகளில் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் மற்றும் சுயேச்சைகள் என 219 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தகுதி வாய்ந்த வாக்காளர்களின் எண்ணிக்கை 23.27 லட்சம் என தேர்தல் கமிஷன் கூறியுள்ளது. வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

The post பலத்த போலீஸ் பாதுகாப்பு: ஜம்மு – காஷ்மீரில் நாளை 24 தொகுதிகளில் வாக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Jammu and Kashmir ,Srinagar ,BJP ,Kashmir ,Dinakaran ,
× RELATED ஜம்மு-காஷ்மீரில் வாக்குப்பதிவு...