×

தூய்மை சேவை விழிப்புணர்வு பேரணி

ராசிபுரம், செப்.17: ராசிபுரம் நகராட்சியில் தூய்மையே எங்களின் சேவை விழிப்புணர்வு பேரணி நடந்தது. நிகழ்ச்சிக்கு நகர்மன்ற தலைவர் கவிதா சங்கர் தலைமை வகித்து, பேரணியை தொடங்கி வைத்தார். நகராட்சி ஆணையர் சேகர், தூய்மை அலுவலர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர். இதில் மாணவிகள் என் குப்பை என் பொறுப்பு, தூய்மையாக வைத்திருக்க உறுதிமொழி ஏற்போம் என்ற வாசகம் அடங்கிய தட்டிகளை ஏந்தியபடி, முக்கிய வீதிகள் வழியாக சென்றனர். இந்நிகழ்ச்சியில், எஸ்ஆர்வி ெபண்கள் மேல்நிலைப்பள்ளி முதல்வர் ஆரோக்கியதாஸ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள், நகராட்சி தூய்மை பணி மேற்பார்வையாளர்கள், தூய்மை பணி பரப்புரையாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post தூய்மை சேவை விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : Cleanliness Service Awareness Rally ,Rasipuram ,Swachhaye ,Rasipuram Municipality ,Municipal President ,Kavita Shankar ,Municipal Commissioner ,Shekhar ,Sanitation Officer ,Selvaraj ,Dinakaran ,
× RELATED தூய்மையே சேவை விழிப்புணர்வு பேரணி