×

மழைக்கால மீட்பு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக 10,000 பேருக்கு பயிற்சி அளிக்க பேரிடர் மேலாண்மைத்துறை திட்டம்..!!

சென்னை: சென்னையில் வடகிழக்கு பருவமழையின் போது வெள்ளம் ஏற்பட்டால் மழைக்கால மீட்பு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக 10,000 பேருக்கு பயிற்சி அளிக்க பேரிடர் மேலாண்மைத்துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்துக்கு வரும் அக்டோபர் முதல் டிசம்பர் வரையில் வடகிழக்கு பருவமழைக் காலமாகும். இந்த காலகட்டத்தில், அதிகளவு மழையை தமிழகத்தின் வட பகுதிகளான சென்னை மாநகராட்சி, தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சிகள் மற்றும் திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள் பெறுகின்றன.

இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை அடுத்த மாத இறுதியில் தொடங்க உள்ள நிலையில் சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளில் மண்டல வாரியாக பேரிடர் மீட்பு பயிற்சி தீவிரமடைந்துள்ளது. வடகிழக்கு பருவமழையின் போது அதீத மழையால் வெள்ளம் ஏற்பட்டால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்வது தொடர்பாக பயிற்சி அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மழைக்கால மீட்பு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளில் உள்ள 500 குடியிருப்போர் நலச்சங்கங்களைச் சேர்ந்த 10,000 பேருக்கு பயிற்சி அளிக்க பேரிடர் மேலாண்மைத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. மக்களை மீட்பது குறித்து பேரிடர் மேலாண்மை துறை மற்றும் தீயணைப்பு – மீட்பு பணிகள் துறை இணைந்து மண்டல வாரியாக பயிற்சி அளிக்க பட உள்ளது.

The post மழைக்கால மீட்பு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக 10,000 பேருக்கு பயிற்சி அளிக்க பேரிடர் மேலாண்மைத்துறை திட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Disaster Management Department ,Tamil Nadu ,
× RELATED சென்னையில் வடகிழக்கு பருவ...