×

ஆடம்பர மின்சார கார்களுக்கு அதிக வரிச்சலுகை!.. இதுதான் நிர்மலா சீதாராமனின் வரி கொள்கை: காங்கிரஸ் குற்றச்சாட்டு!!

திருவனந்தபுரம்: இந்தியாவில் வெளிநாட்டு ஆடம்பர மின்சார கார்களை விட சாதாரண வகை பெட்ரோல் கார்களுக்கு 50% வரை ஜி.எஸ்.டி. மற்றும் செஸ் வரி விதிக்கப்படுவதாக காங்கிரஸ் குற்றச்சாட்டியுள்ளது. 2.38 கோடி ரூபாய் மதிப்புடைய BMW-i7 M70 ஆடம்பர மின்சார காருக்கு 5% ஜிஎஸ்டி-யாக ரூ.11.9 லட்சம் மட்டுமே வசூலிக்கப்படுவதாக கேரள காங்கிரஸ் தனது சமூக வலைத்தளத்தில் தகவல் வெளியிட்டுள்ளது.

அதே நேரத்தில் சாதாரணமான பெட்ரோல் கார்களுக்கு 29% முதல் 50% வரை ஜிஎஸ்டி மற்றும் செஸ் வரி வசூலிக்கப்படுவதாக அதில் கூறப்பட்டுள்ளது. உதாரணமாக இன்னோவா ஹைக்ராஸ் டாப்-எண்ட் விலை ரூ.20.65 லட்சம் என்றாலும், ஜிஎஸ்டி, சாலை வரி சேர்த்தால் ஆன்ரோடு விலைக்கு கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகரித்து ரூ.39.55 லட்சமாகி விடுவதாக காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.

BMW-i7 போன்ற ஒவ்வொரு மின்சார காருக்கும் வழங்கப்படும் மானியத் தொகையான ரூ.1.52 கோடியில் 6 பேருந்துகளை வாங்கி இந்திய சாலைகளில் விட்டிருக்க முடியும் என்று அதில் கூறப்பட்டு இருக்கிறது. உலகின் பணக்கார நாடுகள் கூட அதிசொகுசு மின் வாகனங்களுக்கு இது போன்ற பெரும் வரிச் சலுகைகளை வழங்குவதில்லை என்று கூறியுள்ள கேரள காங்கிரஸ், சுருக்கமாக கூறினால் இதுதான் நிர்மலா சீதாராமனின் வரி கொள்கை, நிதின் கட்கரியின் வாகன கொள்கை என்றும் விமர்சனம் செய்துள்ளது.

The post ஆடம்பர மின்சார கார்களுக்கு அதிக வரிச்சலுகை!.. இதுதான் நிர்மலா சீதாராமனின் வரி கொள்கை: காங்கிரஸ் குற்றச்சாட்டு!! appeared first on Dinakaran.

Tags : NIRMALA ,SITHARAMAN ,Thiruvananthapuram ,India. ,D. ,Congress ,BMW ,Dinakaran ,
× RELATED நாகையில் நிர்மலா சீதாராமனை கண்டித்து...