*ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை
கம்பம் : கம்பம் வேலப்பர் கோயில் வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கம்பம் நகராட்சிக்குட்பட்டு மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. சுமார் 80 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். 22 ஆயிரம் குடியிருப்புகள் உள்ளன. பொதுமக்களின் அடிப்படை தேவைகளை கம்பம் நகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது.
கம்பம் நகராட்சிக்கு உட்பட்ட உழவர் சந்தை முதல் காந்திஜி வீதி வேலப்பர் கோவில் தெரு, அரசமரம் ஆகிய பகுதிகளில் ரோட்டை ஆக்கிரமித்து போக்குவரத்திற்கு இடையூறாக கடைகள் அமைக்கப்பட்டு இருப்பதாலும் கண்ட இடங்களில் டூவீலர்களை நிறுத்திச் செல்வதாலும் மாலை வேளைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மருத்துவமனைகள், வேலப்பர் கோவில் மற்றும் வணிக வளாகங்கள் நிறைந்த இப்பகுதிகளில் அவசர காலத் தேவைக்கு மருத்துவமனை செல்ல முடியாத அளவுக்கு போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கம்பம் நகராட்சி நிர்வாகம் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் மேலும் இப்பகுதிகளில் மாலை வேலைகளில் நிரந்தரமாக போக்குவரத்து காவலர் நியமனம் செய்து போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தவிர்க்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post கம்பம் வேலப்பர் கோயில் வீதியில் ஓவர் டிராபிக் ஜாம் appeared first on Dinakaran.