×

அருமனை அருகே விநாயகர் சிலை ஊர்வலம் வாகனத்தில் கொண்டு வந்த பேப்பர் கன் பறிமுதல்

*எஸ்ஐயிடம் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு

அருமனை : அருமனை அருகே நடந்த விநாயகர் ஊர்வலத்தில் வாகனத்தில் கொண்டு வந்த ராட்சத பேப்பர் கன் பறிமுதல் செய்யப்பட்டது. விநாயகர் சதுர்த்தியையொட்டி குமரி மாவட்டத்தில் பூஜைக்கு வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் நேற்றுமுன்தினம் முதல் ஆறு, கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நேற்றும் பல்வேறு இடங்களில் ஊர்வலமாக விநாயகர் சிலைகள் கொண்டு செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.

நேற்று காலை அருமனை சந்திப்பு வழியாக விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. அப்போது போலீசார் எச்சரிக்கையை மீறி வண்ணதாள்களை சிலைகளின் மேல் பூக்கள் போல தூவுவதற்காக ஒரு வாகனத்தில் ராட்சத பேப்பர் கன் வைக்கப்பட்டிருந்தது.அதனைக்கண்ட எஸ்ஐ சரவணக்குமார் உடனே அந்த வாகனத்தை நிறுத்தி பேப்பர் கன்னை பறிமுதல் செய்தார். அப்போது ஆத்திரமடைந்த வாகனத்தில் வந்தவர்களும், ஊர்வலத்தில் கலந்துகொண்ட பொதுமக்களும் எஸ்ஐ சரவணக்குமாரிடம் வாக்குவாதம் செய்தனர்.

ஆனாலும் எஸ்ஐ சரவணக்குமார் தடையை மீறி பேப்பர் கன் வைக்கக்கூடாது எனக்கூறி அவற்றை மட்டும் அருமனை காவல் நிலையத்துக்கு அனுப்பி வைத்தார். பின்னர் விநாயகர் சிலை இருந்த வாகனத்தை தொடர்ந்து செல்ல அனுமதியளித்தார்.இதையடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்கள் ஒருவழியாக சமாதானமாகி அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
நேற்று முன்தினமும் இதுபோல விநாயகர் சிலை வாகனங்களில் கொண்டுவந்த ராட்சத பேப்பர் கன்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post அருமனை அருகே விநாயகர் சிலை ஊர்வலம் வாகனத்தில் கொண்டு வந்த பேப்பர் கன் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Vinayagar ,Aruman ,Arumana ,Vinayagar Chaturthiaioti ,Kumari district ,Dinakaran ,
× RELATED கன்னியாகுமரியில் விநாயகர் சிலை ஊர்வலம்: போக்குவரத்து மாற்றம்