×

‘அமெரிக்காவில் நிச்சயம்…ஆண்டிபட்டியில் டும்டும்…’

*சீனப்பெண்ணை கரம் பிடித்தார் தேனி வாலிபர்

ஆண்டிபட்டி : தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே அம்மச்சியாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அமுதன் – சரவணகுமாரி தம்பதி. இவர்கள் அமெரிக்க குடியுரிமை பெற்று சான்பிரான்சிஸ்கோ நகரில் வசித்து வருகின்றனர். தருண்ராஜ், கிரண்ராஜ் என 2 மகன்கள் உள்ளனர்.மூத்த மகன் தருண்ராஜ் பொறியல் பட்டப்படிப்பை அமெரிக்காவில் முடித்து, சான்பிரான்சிஸ்கோவில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிகிறார். அதே நிறுவனத்தில் பணிபுரிந்த சீனாவை சேர்ந்த பீட்டர்ஜூ – பிங்வூ தம்பதியின் மகளான சுனோ ஜூ என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.

இவர்கள் காதலுக்கு இரு குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்ததால், தருண்ராஜ்- சுனோ ஜூ ஜோடிக்கு அமெரிக்காவில் நிச்சயதார்த்தம் நடந்தது. இதனையடுத்து திருமணம் பாரம்பரிய முறைப்படி மணமகனின் சொந்த ஊரான தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அம்மச்சியாபுரம் கிராமம் அருகே க.விலக்கு பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று வெகுவிமரிசையாக நடைபெற்றது.

 

The post ‘அமெரிக்காவில் நிச்சயம்…ஆண்டிபட்டியில் டும்டும்…’ appeared first on Dinakaran.

Tags : America…Tumtum ,Antipatti… ,Theni ,Andipatti ,Amuthan ,Saravanakumari ,Ammachiyapuram ,Andipatti, Theni district ,US ,San Francisco ,Tarunraj ,Kiranraj ,America ,
× RELATED கடமலைக்குண்டு பகுதியில் கூட்டமாக...