×

கும்மிடிப்பூண்டி அருகே சீலை அகற்றி பட்டியலின மக்களை தரிசனத்துக்காக கோயிலுக்குள் அழைத்துச் சென்ற மாவட்ட ஆட்சியர்

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி வழுதலம்பேட்டில் உள்ள எட்டியம்மன் கோயிலில் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தலைமையில் உள்ளே சென்று பட்டியல் சமூக மக்கள் சாமி தரிசனம் செய்தனர். மாவட்ட எஸ்.பி. தலைமையில் 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பட்டியல் சமூக மக்கள் தங்களுக்கு சொந்தமான பாதையில் கோயிலுக்கு செல்ல மாற்று சமூகத்தை சேர்ந்தவர்கள் எதிர்த்ததால் கோவிலுக்கு சீல் வைக்கப்பட்டது. பின்னர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் கோயில் திறக்கப்பட்டது.

The post கும்மிடிப்பூண்டி அருகே சீலை அகற்றி பட்டியலின மக்களை தரிசனத்துக்காக கோயிலுக்குள் அழைத்துச் சென்ற மாவட்ட ஆட்சியர் appeared first on Dinakaran.

Tags : Kummidipundi ,THIRUVALLUR ,DISTRICT ,GOVERNOR ,PRABUSHANKAR ,KUMMIDIPUNDI PARUTHALAMBET ,SAMI ,District S. B. ,
× RELATED மீஞ்சூர் அருகே ரயில் சேவை பாதிப்பு..!!