×

திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விடுமுறை தினமான நேற்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் திரண்டனர். பக்தர்கள் வருகை அதிகரித்ததால் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள அறைகள் முழுவதும் நிரம்பியுள்ளது. மேலும் தங்கும் அறைகளுக்கு வர சுமார் 3 கிலோ மீட்டர் தூரமுள்ள கிருஷ்ணதேஜா கெஸ்ட் அவுஸ் வரை நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 24 மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்யும் நிலை உள்ளது. அதேநேரத்தில் ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 4 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.

The post திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Tirupati ,Tirumala ,Tirupati Eyumalayan temple ,Vaikundam Q ,
× RELATED லட்டு நெய்யில் கலப்பட விவகாரம்...