×

மாந்திரீகம் செய்ததாக சந்தேகம் ஒரே குடும்பத்தில் 5 பேர் கொலை

சுக்மா: சட்டீஸ்கரின் சுக்மா மாவட்டம் கோண்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எக்டல் கிராமத்தில் பழங்குடியினர் அதிகளவில் வசிக்கின்றனர். இந்நிலையில் இங்கு மாந்திரீகம் செய்து விட்டதாக சந்தேகத்தின் பேரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 தம்பதிகள் மற்றும் ஒரு பெண் ஆகிய 5 பேர் அடித்து கொலை செய்யப்பட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற கோண்டா காவல்துறையினர் இந்த கொலை சம்பவம் தொடர்பாக 5 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதேபோன்று, மாந்திரீகம் செய்ததாக கடந்த வியாழக்கிழமை(12ம் தேதி) சட்டீஸ்கரின் பலோடாபஜார் – பதாபரா கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அடித்து கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post மாந்திரீகம் செய்ததாக சந்தேகம் ஒரே குடும்பத்தில் 5 பேர் கொலை appeared first on Dinakaran.

Tags : Sukma ,Ekdal ,Konda ,Sukma district ,Chhattisgarh ,Dinakaran ,
× RELATED பெண் அமைச்சருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்