×

ஆட்சிக்கு வந்தால் 1 மணி நேரத்தில் மதுவிலக்கு ரத்து

பாட்னா: பீகாரில் தனது ஜன் சூராஜ் கட்சி ஆட்சிக்கு வந்தால் அடுத்த 1 மணிநேரத்தில் மதுவிலக்கு ரத்து செய்யப்படும் என்று தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்து அரசியல்வாதியாக மாறிய பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். வரும் அக்டோபர் 2ம் தேதி அவர் தொடங்க இருக்கும் ஜன் சூராஜ் கட்சி குறித்து செய்தியாளர்களிடம் பிரசாந்த் கிஷோர் பேசியபோது, ‘‘பீகாரில் அடுத்து ஜன் சூராஜ் ஆட்சி வந்தால் அடுத்த 1 மணி நேரத்தில் மதுவிலக்கை ரத்து செய்வோம். அதனால் பெண்களின் வாக்கு வங்கியை நான் இழந்தாலும் கவலை இல்லை. மதுவிலக்கு என்பது நிதிஷ் குமாரின் போலி நடவடிக்கையேத் தவிர வேறொன்றும் இல்லை’’ என்றார்.

The post ஆட்சிக்கு வந்தால் 1 மணி நேரத்தில் மதுவிலக்கு ரத்து appeared first on Dinakaran.

Tags : Patna ,Prashant Kishore ,Jan Sooraj Party ,Bihar ,
× RELATED ஜன் சுராஜ் என்ற பெயரில் பிரசாந்த்...