×

கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை குறைந்தது

அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டில் ஓணம் பண்டிகை முன்னிட்டு அனைத்து பூக்களின் விலை உயர்ந்தது. இதன்படி, ஒரு கிலோ மல்லி 800 ரூபாய்க்கும் ஐஸ் மல்லி 700க்கும் கனகாம்பரம் 1000 க்கும் ஜாதி மல்லி மற்றும் முல்லை 600க்கும் சாமந்தி 100 க்கும் சம்பங்கி 240 க்கும் சாக்லேட் ரோஸ் 160 க்கும் பன்னீர் ரோஸ் 80 க்கும் வாடாமல்லி 200க்கும் அரளி பூ 120 க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்தநிலையில் முகூர்த்த நாட்கள் முடிந்ததால் இன்று காலை மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலை சற்று குறைந்துள்ளது.

இதன்படி, கனகாம்பரம் 800க்கும் முல்லை மற்றும் ஜாதி மல்லி 500 க்கும் சாமந்தி 60 க்கும் சம்பங்கி 220க்கும் சாக்லேட் ரோஸ் 140 க்கும் பன்னீர் ரோஸ் 50 க்கும் அரளி பூ 100 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கோயம்பேடு பூ மார்க்கெட் துணை தலைவர் முத்துராஜ் கூறுகையில், ‘’ஒணம் பண்டிகை முன்னிட்டு நேற்று அனைத்து பூக்களின் விலை உயர்ந்தது. வியாபாரிகள் எதிர்பார்த்த நிலையில் போதுமான வியாபாரம் இல்லாததால் ஏமாற்றும் அடைந்தனர். முகூர்த்த நாட்கள் முடிந்ததால் இன்று காலை மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலை குறைந்துள்ளது. நாளை மீண்டும் அனைத்து பூக்களின் விலை குறையும்’ என்றார்.

The post கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை குறைந்தது appeared first on Dinakaran.

Tags : Koyambedu ,Annanagar ,Chennai ,Onam festival ,
× RELATED கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் விலை சரிவு