×

ஊட்டியில் பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலர்கள்: சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு

ஊட்டி: ஊட்டியில் பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலர்களை சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கண்டு ரசித்து செல்கின்றனர். நீலகிரி மாவட்டத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் `ஸ்டபிலான்தஸ் குந்தியானஸ்’ என்ற வகை குறிஞ்சி மலர்கள், ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் `ஸ்டபிலான்தஸ் மினியேச்சர்’ வகை குறிஞ்சி மலர்கள் உள்ளன. தற்போது மாவட்டத்தில் ஊட்டி அடுத்த கெங்கமுடி அருகே பிக்கப்பதிமந்து பகுதியில் மலைச்சரிவில் பல இடங்களில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் ‘ஸ்டபிலான்தஸ் குந்தியானஸ்’ என்ற குறிஞ்சி மலர்கள் அதிகளவு பூத்து குலுங்குகின்றன.

இவற்றை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பார்வையிட்டு மகிழ்கின்றனர். இதுதவிர ஊட்டி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், அவ்வழியாக செல்லும் சுற்றுலா பயணிகளும் கண்டு ரசித்து செல்வதோடு அதன் அருகே நின்று புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.

The post ஊட்டியில் பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலர்கள்: சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு appeared first on Dinakaran.

Tags : Ooty ,Nilgiri district ,
× RELATED மார்க்கெட் நடைபாதையில் மீண்டும் தடுப்புகள் அமைக்க கோரிக்கை