×

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அண்ணாவின் 116வது பிறந்தநாள் விழா: அனைத்து கட்சியினர் மரியாதை

காஞ்சிபுரம்: அண்ணாவின் 116வது பிறந்தநாள் விழா காஞ்சிபுரத்தில் கொண்டாடப்பட்டது. காஞ்சிபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் உள்ள திருவுருவ சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் மாலை அணிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். அரசு சார்பில் அண்ணா இல்லத்தில் சிறு, குறு மற்றும் தொழில் நிறுவனங்களின் அமைச்சர் தா.மோ.அன்பரசன், கலெக்டர் கலைச்செல்வி மோகன், காஞ்சிபுரம் தொகுதி எம்பி க.செல்வம், எம்எல்ஏக்கள் க.சுந்தர், வக்கீல் ஏழிலரசன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் தலைமை வகித்து அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினார். காஞ்சிபுரம் மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன் வரவேற்றார். காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ்,மாவட்ட பொருளாளர் சன் பிராண்ட் ஆறுமுகம், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் எம்.எஸ்.சுகுமார், எஸ்கேபி.சீனிவாசன், செயற்குழு உறுப்பினர் சிகாமணி, ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.குமார், குமணன், படுநேல்லிபாபு, பகுதி செயலாளர்கள் சந்துரு, தசரதன், திலகர், வெங்கடேசன், தொமுச பேரவை நிர்வாகிகள் சுந்தரவதனம், இளங்கோவன், மாநகர நிர்வாகிகள் செங்குட்டுவன், முத்து செல்வம், ஜெகநாதன், சுப்புராயன், மாவட்ட இளைஞரணி யுவராஜ், நிர்வாகிகள் வி.எஸ்.ராமகிருஷ்ணன், செவிலிமேடு மோகன் கலந்துகொண்டனர்.

அதிமுக சார்பில் மேற்கு மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, ஒன்றிய செயலாளர் தும்பவனம் ஜீவானந்தம், மாவட்ட ஜெ.பேரவை செயலாளர் சோமசுந்தரம், பகுதி செயலாளர்கள் ஸ்டாலின், பாலாஜி, ஜெயராஜ் இருந்தனர். பொதுமக்களுக்கு லட்டு வழங்கினர். காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட மதிமுக சார்பில், அண்ணாவின் நினைவு இல்லத்துக்கு சென்று அவரது உருவச் சிலைக்கு மதிமுக மாநகர செயலாளர் மகேஷ், நெசவாளர் அணி ஏகாம்பரம் உள்ளிட்ட மதிமு நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதிமுக (ஓபிஎஸ் அணி) சார்பில், மாவட்ட செயலாளர் ஆர்.வி.ரஞ்சித் குமார் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கினார். அவைத்தலைவர் ரங்கநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தேமுதிக சார்பில் ஏகாம்பரம் தலைமையில் தேமுதிகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

The post காஞ்சிபுரம் மாவட்டத்தில் அண்ணாவின் 116வது பிறந்தநாள் விழா: அனைத்து கட்சியினர் மரியாதை appeared first on Dinakaran.

Tags : Anna ,Kanchipuram district ,Kanchipuram ,Lord ,Kancheepuram ,
× RELATED காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ரேஷன்...