×

உத்தராகண்ட் மாநிலத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் சிக்கித் தவித்த 30 பேர் பத்திரமாக மீட்பு!

உத்தராகண்ட் மாநிலத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் சிக்கித் தவித்த 30 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். நிலச்சரிவால் சிக்கித் தவித்த 30 தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார். நிலச்சரிவால் சிக்கித் தவித்த 30 பேரையும் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்டது மீட்புக் குழு. சிதம்பரத்தில் இருந்து ஆன்மிக சுற்றுலா சென்றவர்கள் ஆதிகைலாஷ் என்ற பகுதியில் இருந்து வரும்போது நிலச்சரிவு ஏற்பட்டது. மலைப்பகுதி வழியாக வேனில் திரும்பியபோது, தவாகாட் தானாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.

 

The post உத்தராகண்ட் மாநிலத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் சிக்கித் தவித்த 30 பேர் பத்திரமாக மீட்பு! appeared first on Dinakaran.

Tags : Uttarakhand ,Chief Minister ,Tamils ,
× RELATED திருப்பதி லட்டு விவகாரம்: உத்தராகண்ட்...