×

திருப்பூர் மாவட்டத்தில் லோக் அதாலத் 3 ஆயிரம் வழக்குகள் ரூ.64.41 கோடிக்கு சமரச தீர்வு: விபத்தில் பலியான வாலிபர் குடும்பத்திற்கு ரூ.1.5 கோடிக்கு இழப்பீடு

திருப்பூர்: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கார்த்திகேயன் மற்றும் மஞ்சுளா தலைமையிலும்,முதன்மை மாவட்ட நீதிபதியும், திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான குணசேகரன் முன்னிலையில்,திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள நீதிமன்ற வளாகங்களில் தேசிய மக்கள் நீதிமன்ற நிகழ்வு (லோக் அதாலத்) மொத்தம் 20 அமர்வுகளாக நடைபெற்றது. இதில் 4,474 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு மூன்றாயிரம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.64 கோடியே 41 லட்சத்து 13 ஆயிரத்து 867 ஆகும்.

இதில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள் 515 அவற்றின் மொத்த மதிப்புகள் ரூ.35 கோடியே 92 லட்சத்து 93 ஆயிரத்து 562, சிவில் வழக்குகள் 97 அவற்றின் மொத்த மதிப்புகள் ரூ.26 கோடியே 30 லட்சத்து 17 ஆயிரத்து136.குடும்ப நல வழக்கு 4 அவற்றின் மொத்த மதிப்புகள் ரூ.9 லட்சம். சமரசத்திற்குரிய குற்ற வழக்குகள் 2,316 அவற்றின் மொத்த மதிப்புகள் ரூ.12 லட்சத்து 85 ஆயிரத்து 200 காசோலை. மோசடி வழக்குகள் 12 அவற்றின் மொத்த மதிப்புகள் ரூ.27 லட்சத்து 31 ஆயிரத்து 500. வங்கி வாரக்கடன் வழக்குகள் 56 அவற்றின் மொத்த மதிப்புகள் ரூ.53 லட்சத்து 21 ஆயிரத்து 469 ஆகும்.

திருப்பூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் கோவை ஆலாம்பாளையத்தை சேர்ந்த சங்கர் (26) என்பவர் கடந்த ஆண்டு மே மாதம் நீலாம்பூரில் பைக்கில் சென்ற போது சரக்கு வாகனம் மோதி பலியானார். இது தொடர்பாக ரூ.2 கோடி இழப்பீடு கேட்டு அவரது தந்தை செல்வம் திருப்பூர் மோட்டார் வாகன சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு ரூ.1.கோடியே 5 லட்சத்திற்கு தீர்வு காணப்பட்டது. ரூ.1 கோடியே 5 லட்சத்திற்கான காசோலையை நீதிபதிகள் கார்த்திகேயன் மற்றும் மஞ்சுளா ஆகியோர் சங்கர் பெற்றோரிடம் வழங்கினர்.

இதில் மோட்டார் வாகன சிறப்பு நீதிபதிகள் குமார் மற்றும் பாலு, முதன்மை மாவட்ட நீதிபதி குணசேகரன், சங்கர் தரப்பு வக்கீல் பாலகுமார் இன்சூரன்ஸ் நிறுவனத்தினர் கலந்துகொண்டனர். இதுபோல் சங்ககிரியை சேர்ந்த விக்னேஷ் (27) என்பவர் கடந்த 2022ம் ஆண்டு அவினாசி சாலையில் நின்றபோது, பின்னால் வந்த பைக் மோதி படுகாயமடைந்தார். இதனால் ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்தார். இதற்கு ரு.68 லட்சம் வழங்கி சமரச தீர்வு காணப்பட்டது. நீதிபதிகள் இதற்கான காசோலையை விக்னேசிடம் வழங்கினர்.

பாதிக்கப்பட்டவர் தரப்பில் வக்கீல் யுவராஜ் ஆஜராகினார். இந்நிகழ்வில் மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாய நீதிபதி குமார். சிறப்பு மோட்டார் வாகன மாவட்ட நீதிபதி பாலு, எஸ்.சி.டி சிறப்பு நீதிமன்ற மாவட்ட மாவட்ட நீதிபதி பத்மா, குடும்ப நல நீதிபதி பிரபாகரன், முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி , முதன்மை சார்பு நீதிபதி மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் ராமசந்திரன் கூடுதல் சார்பு நீதிபதி கண்ணன், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி சுப நீதித்துறை நடுவர்கள் செந்தில் ராஜா,பழனிக்குமார், முருகேசன், ரஞ்சித்குமார், வழக்கறிஞர்கள் சுப்ரமணியன், பூபேஷ், பழனிசாமி, நாகராஜன், பாலகுமார், பாலாஜி கிருஷ்ணா, ராஜேந்திரன், மல்லிகா ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post திருப்பூர் மாவட்டத்தில் லோக் அதாலத் 3 ஆயிரம் வழக்குகள் ரூ.64.41 கோடிக்கு சமரச தீர்வு: விபத்தில் பலியான வாலிபர் குடும்பத்திற்கு ரூ.1.5 கோடிக்கு இழப்பீடு appeared first on Dinakaran.

Tags : Lok ,Tiruppur district ,Tiruppur ,Chennai High Court ,Karthikeyan ,Manjula ,Chief District Judge ,Gunasekaran ,Tiruppur District Legal Affairs Commission ,National People's Court ,Lok Athalath ,Lok Atalat ,Dinakaran ,
× RELATED திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே...