×

திமுக நிர்வாகி அடித்துக்கொலை

திருச்சி: திருச்சியில் திமுக நிர்வாகி கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி கீழ தேவதானத்தை சேர்ந்தவர் பாண்டியராஜன். இவர்களது மகன்கள் ரமேஷ்(46), பிருத்திவிராஜ்(48). இந்நிலையில் நேற்று காலை இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவர்களை சமாதானப்படுத்தி விட்டு சென்றனர். இதன் பின்னர் பிற்பகல் 1 மணியளவில் பிரித்விராஜ், ரமேஷ் மற்றும் அவரது நண்பர் சௌந்தர் ஆகிய மூவரும் மூன்றாவது மாடியில் உள்ள தனி அறையில் அமர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது மீண்டும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த ரமேஷ், அங்கிருந்த உடற் பயிற்சி செய்யும் கர்லாக் கட்டையால் பிரித்விராஜ் தலையில் ஓங்கி அடித்தார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதையடுத்து சௌந்தர் மற்றும் ரமேஷ் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதற்கிடையே, மாடிக்கு சென்ற மூவரும் என்ன ஆனார்கள் என தெரியாத நிலையில், அவரது குடும்பத்தினர் மாடிக்கு சென்று பார்த்தனர். அப்போது பிரித்திவிராஜ் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததை கண்டு கதறினர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையான பிருத்திவிராஜ், திமுக ஆதிதிராவிடர் நலக்குழு தெற்கு மாவட்ட துணை அமைப்பாளர் பொறுப்பு வகித்து வந்தார்.

The post திமுக நிர்வாகி அடித்துக்கொலை appeared first on Dinakaran.

Tags : Dhimuka ,Trichy ,Dimuka ,PANDIYARAJAN ,TRICHI ,Ramesh ,Prithviraj ,
× RELATED விண்ணும், மண்ணும் இருக்கும்வரை திமுக...