×

மாணவிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் ஆசிரியர் கைது

கோத்தகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்தவர் ரஞ்சித் (25). இவர் கடந்த 2022ம் ஆண்டு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியபோது, 6ம் வகுப்பு மாணவி ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிகிறது. பின்னர் வேலையைவிட்டுச் சென்றுவிட்டார். மீண்டும் 2023ல் வேறொரு தனியார் பள்ளியில் பணியாற்றியபோது, அங்கு படித்த அதே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இதுகுறித்து புகாரின்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் ஆசிரியர் ரஞ்சித்தை போலீசார் கைது செய்தனர்.

The post மாணவிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் ஆசிரியர் கைது appeared first on Dinakaran.

Tags : Kotagiri ,Ranjith ,Nilgiri district ,
× RELATED கோத்தகிரி அருகே பரபரப்பு;...