×

குடும்பத்துல குழப்பத்த ஏற்படுத்தாதீங்க… ஓபிஎஸ் அலறல்

அவனியாபுரம்: ‘எங்கள் குடும்பத்தில் சிக்கல் ஏற்படுத்த வேண்டாம் என்று ஓபிஎஸ் தெரிவித்து உள்ளார். மதுரை வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், விமான நிலையத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: திருமாவளவன் தன்னுடைய எக்ஸ் தளத்தில் 1999ம் ஆண்டு பேசியதை தற்போது பதிவு செய்து நீக்கியதற்கு, ஏன் பதிவிட்டார்? நீக்கினார்? என்ற இரு கேள்விகளுக்கும் அவர் தான் பதில் சொல்ல வேண்டும். என்னுடைய அரசியல் பார்வையில். யார் கேள்வி கேட்டார்களோ மீண்டும் யார் வாபஸ் பெற்றார்களோ அவர்கள் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும். மது ஒழிப்பு மாநாட்டிற்கு திருமாவளவன் பொதுவாகத்தான் அழைப்பு விடுத்துள்ளார். எங்களுடைய நிலைப்பாடு, தலைமை கழக நிர்வாகிகள் கூடி முடிவெடுப்போம் என்று ஏற்கனவே சொல்லி இருந்தோம்.

இதுகுறித்து பூர்வாங்க நடவடிக்கை எடுக்கும்போது இதற்கு பதில் கிடைக்கும். என்னை பொறுத்தவரை மது தமிழகத்தில் இருக்கக் கூடாது. இதுவே எனது நிலைப்பாடு. முதல்வர் வெளிநாட்டு பயணம் உண்மையிலேயே முதலீடு ஈர்க்கப்பட்டு, இங்கு வந்து சேர்ந்து, தொழிற்சாலை துவங்கினால் உள்ளபடி நான் வரவேற்கிறேன். வரும் காலத்தில் பிரிந்த சக்திகள் ஒன்றிணைந்தால் தான் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்ற சூழல் இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கூறினார். தொடர்ந்து நிருபர்கள், ‘‘உங்கள் மூத்த மகன் அரசியலில் உள்ள சூழலில், இளைய மகன் அரசியலுக்கு வருவதில் உங்களுக்கு விருப்பம் இல்லையா?’’ என்ற கேள்விக்கு, ‘‘எங்கள் குடும்பத்தில் சிக்கல் ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்கிறீர்கள். அது நடக்காது’’ என்றார்.

The post குடும்பத்துல குழப்பத்த ஏற்படுத்தாதீங்க… ஓபிஎஸ் அலறல் appeared first on Dinakaran.

Tags : AVANIAPURAM ,Madurai ,O. Paneer Selvam ,Thirumavalavan ,
× RELATED மதுரை ஏர்போர்ட் 24 மணி நேரமும் இயங்கும்: அக்.1 முதல் அமல்