×

ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்து தேமுதிக தொடக்க நாளை கொண்டாடுவோம்: தொண்டர்களுக்கு பிரேமலதா கடிதம்

சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: நல்ல நோக்கத்திற்காகத் தொடங்கப்பட்ட கட்சி தேமுதிக. கட்சி தொடங்கி 19 ஆண்டுகள் முடிவடைந்து இன்று (நேற்று) 20ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. எத்தனையோ வெற்றிகள், தோல்விகள், துரோகங்கள், அவதூறு வழக்குகள் வந்த போதும் பல சவால்களை சந்தித்து வீறு நடைபோடுகிறது தேமுதிக. தேமுதிகவினர் உண்மை விசுவாசத்தின் பிரதிபலிப்பாகவும், முன் எப்போதும் இருப்பதை காட்டிலும் பல மடங்கு ஒற்றுமையாகவும், உறுதியோடும் இருந்து வரப்போகும் தேர்தல்களை சந்தித்து தேமுதிக இன்று தமிழ்நாட்டில் அசைக்க முடியாத சக்தி என்றும், தமிழ்நாட்டில் யாரும் தவிர்க்க முடியாத மாபெரும் இயக்கம் என்றும், நம் உழைப்பால் மேலும் உணர்த்துவோம் என்றார்.

The post ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்து தேமுதிக தொடக்க நாளை கொண்டாடுவோம்: தொண்டர்களுக்கு பிரேமலதா கடிதம் appeared first on Dinakaran.

Tags : Temuthika Start Day ,Premalatha ,Chennai ,Demutika ,Secretary General ,Helping Poor, ,to ,Dinakaran ,
× RELATED தேமுதிக 20ம் ஆண்டு துவக்க விழா: பிரேமலதா விஜயகாந்த் கொடியேற்றினார்